செய்திகள்
பாஜக

ப.சிதம்பரம் வழக்கில் மத்திய அரசு தலையீடா? - பா.ஜனதா கட்சி மறுப்பு

Published On 2019-08-22 02:46 GMT   |   Update On 2019-08-22 02:46 GMT
ப.சிதம்பரம் வழக்கில் மத்திய அரசின் தூண்டுதலின்பேரில் விசாரணை அமைப்புகள் செயல்படவில்லை என்று பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

ப.சிதம்பரம் வழக்கு விவகாரம், பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.

இதை பா.ஜனதா கட்சி திட்டவட்டமாக மறுக்கிறது.



இதுபற்றி அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ஷா நவாஸ் உசேன் கூறுகையில், “அவர் தவறு செய்திருந்தால், அதற்கான விளைவுகளை சந்தித்துத்தான் ஆக வேண்டும். மத்திய அரசின் தூண்டுதலின்பேரில் விசாரணை அமைப்புகள் (சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம்) செயல்படவில்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள்” என குறிப்பிட்டார்.
Tags:    

Similar News