செய்திகள்
பா.ஜ.க.வில் இணைந்த சுரேந்திர சிங் நாகர், சஞ்சய் சேத்

பா.ஜ.க.வில் இணைந்த சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.பி.க்கள்

Published On 2019-08-10 10:26 GMT   |   Update On 2019-08-10 10:26 GMT
சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த 2 தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
புதுடெல்லி:

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சுரேந்திர சிங் நாகர்,  சஞ்சய் சேத் ஆகியோர் கட்சியில் இருந்தும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் சமீபத்தில் விலகினர்.

இந்நிலையில், இருவரும் இன்று டெல்லி சென்று, பாஜக பொதுச்செயலாளர் பூபேந்தர் யாதவ் மற்றும் ஊடகப்பிரிவு தலைவர் அனில் பலுனி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பாஜகவில் இணைந்த இருவரும், மோடியின் தலைமை மற்றும் மத்திய அரசின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டினர். குறிப்பாக ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டத்தை ரத்து செய்ததை வரவேற்றனர்.

இரண்டு மாநிலங்களவை எம்.பி.க்களும் ராஜினாமா செய்ததால் அந்த பதவிகள் காலியாக உள்ளன. எனவே, அந்த இடங்களுக்கான  இடைத்தேர்தலில், மீண்டும் அவர்களையே பாஜக வேட்பாளர்களாக  நிறுத்தலாம் என தெரிகிறது.

உத்தர பிரதேசத்தில் ஜூலை 15ம் தேதிக்குப் பிறகு சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News