செய்திகள்
சுஷ்மா சுவராஜுடன் ஹமீத் நிகில் அன்சாரி

என் தாயைப் போன்றவர் சுஷ்மா சுவராஜ்.. -அன்சாரி உருக்கம்

Published On 2019-08-07 07:51 GMT   |   Update On 2019-08-07 07:51 GMT
பாகிஸ்தான் சிறையில் இருந்து வெளியே வந்த ஹமீத் நிகல் அன்சாரி மறைந்த சுஷ்மா சுவராஜ் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.
புது டெல்லி:

பாகிஸ்தானில் உள்ள தனது சமூக வலைத்தள தோழியை 2012-ம் ஆண்டில் சந்திக்க சென்றிருந்த மும்பை சாப்ட்வேர் என்ஜினீயர் ஹமீத் நிகல் அன்சாரி (வயது 33), சட்டவிரோதமாக அந்த நாட்டுக்கு சென்றதாக கைது செய்யப்பட்டார். தண்டனை முடிந்து கடந்த ஆண்டு டிசம்பர் 18ம் தேதி அவர் நாடு திரும்பினார்.

இதனையடுத்து டெல்லியில் மத்திய வெளியுறவு மந்திரி சு‌ஷ்மா சுவராஜை அவர் குடும்பத்தினருடன் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பு உணர்வு மயமாக இருந்தது. சு‌ஷ்மா சுவராஜ், அன்சாரியை தாய் போல தழுவி, தட்டிக் கொடுத்தார். அப்போது அவர், ‘‘என்னை மன்னித்து விடுங்கள். நன்றி அம்மா’’ என்று கூறினார்.



தனது பாகிஸ்தான் அனுபவங்களை சு‌ஷ்மா சுவராஜிடம் பகிர்ந்து கொண்டபோது அவரது கன்னங்களில் கண்ணீர்த்துளிகள் உருண்டோடின. அப்போது சு‌ஷ்மா சுவராஜ், ‘‘உங்களிடம் நிறைய துணிச்சல் இருக்கிறது.

நீங்கள் மன்னிப்பு கேட்கக்கூடாது’’ என குறிப்பிட்டார். பின்னர் அன்சாரியின் தாயார் பாஜியாவும் சு‌ஷ்மா சுவராஜூக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில் சுஷ்மா சுவராஜ் நேற்றிரவு மரணமடைந்தார்.

இது குறித்து பேசிய ஹமீத், ‘நான் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் என்றுமே என் இதயத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்பார். அவர் என் தாயைப் போன்றவர். அவர் தற்போது இல்லாதது எனக்கு மிகப்பெரிய இழப்பு. நான் பாகிஸ்தானில் இருந்து வெளிவரவும், வெளிவந்த பின்னும் பல வழிகளில் எனக்கு உதவி செய்துள்ளார்’ என உருக்கமாக கூறியுள்ளார்.



#HamidNehalAnsari #SushmaSwaraj 
Tags:    

Similar News