செய்திகள்
ராகுல் காந்தி பெயர் கொண்ட வாலிபர்

ராகுல்காந்தியால் சிக்கல்- பெயரை மாற்ற முடிவு செய்த வாலிபர்

Published On 2019-08-01 08:41 GMT   |   Update On 2019-08-01 08:41 GMT
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை கொண்டு இருப்பதால் வாலிபர் ஒருவர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கிறார்.
இந்தூர்:

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ராகுல் காந்தி (வயது22).

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை கொண்டு இருப்பதால் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கிறார். இந்தூரில் துணி வியாபாரம் செய்துவரும் அவர் இதுபற்றி கூறியதாவது:-

‘நான் ராகுல் காந்தி பெயரை வைத்து ஏமாற்றும் மோசடி நபர் அல்ல என்று எல்லோரையும் நம்ப வைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனது பெயரில் உள்ள ‘காந்தி’ என்ற குடும்ப பெயரை மாற்றுவது குறித்தும் யோசித்து வருகிறேன். எனது பெயரில் (ராகுல் காந்தி) ஆதார் அட்டை வாங்கி உள்ளேன்.


மொபைல் சிம் கார்டு வாங்குவதற்கோ அல்லது பிற பணிகளுக்கோ எனது ஆதார் அட்டை நகல் கொடுக்கும்போது, என்னை போலி நபராக நினைக்கின்றனர். மேலும் என்னை சந்தேகத்துடன் பார்க்கின்றனர். போனில் புதிய நபர்களுடன் அறிமுகம் செய்து கொள்ளும் போது, ராகுல் காந்தி எப்போது இந்தூருக்கு வசிக்க வந்தார் என்று கேட்கின்றனர்.

எனது தந்தை ராஜேஷ் மால்வியா, துணை ராணுவ படையில் சலவையாளராக பணியாற்றும் போது, அவரை ‘காந்தி’ என்று அதிகாரிகள் அழைத்துள்ளனர். பின்னர் இந்த பெயரில் ஈடுபாடு கொண்ட தந்தை பிறகு அதையே தனது பெயருடன் இணைத்து கொண்டார்.

என்னை பள்ளியில் சேர்க்கும்போது, ‘ராகுல் மாளவியா’ என்பதற்கு பதிலாக ‘ராகுல் காந்தி’ என பெயரை பதிவு செய்தார். 5-ம் வகுப்புடன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டேன். அரசியலுக்கும் எனக்கும் தொடர்பில்லை. எனது பெயரில் உள்ள குடும்பப் பெயரை ‘மாளவியா’ என மாற்றுவது குறித்து தீவிரமாக யோசித்து வருகிறேன்’.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:    

Similar News