செய்திகள்
ஜெய்ப்பூர் விமான நிலையம்

2-வது கட்டமாக 20 முதல் 25 விமான நிலையங்கள் தனியார் மயமாகிறது

Published On 2019-07-26 12:18 GMT   |   Update On 2019-07-26 12:55 GMT
6 விமான நிலையங்கள் முதற்கட்டமாக தனியார் மயமாக்கப்பட்டதை தொடர்ந்து 2-வது கட்டமாக 20 முதல் 25 விமான நிலையங்கள் தனியார் மயமாகிறது.
இந்தியாவில் உள்ள முக்கியமான விமான நிலையங்களான லக்னோ, அகமதாபாத், ஜெய்ப்பூர், மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் கவுகாத்தி விமான நிலையங்கள் ஏற்கனவே தனியார் மயம் ஆக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் செயல்பாடு, நிர்வாகம் மற்றும் வளர்ச்சி ஆகியவை அரசு-தனியார் கூட்டு நடவடிக்கை மூலம் செயல்படுத்தப்படும்.

இந்நிலையில் 2-வது கட்டமாக 20 முதல் 25 விமான நிலையங்கள் தனியார் மயம் ஆக்கப்பட உள்ளதாக இந்திய விமானநிலைங்களுக்கான சேர்மேன் குருபிரசாத் மோஹபத்ரா தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக தனியார் மயமாக்கப்பட்ட 6 விமான நிலையங்களில் ஐந்தை அதானி குழுமம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News