செய்திகள்
பீகார் வெள்ளம்

பீகார், அசாம் வெள்ளத்துக்கு 166 பேர் பலி

Published On 2019-07-22 08:43 GMT   |   Update On 2019-07-22 08:43 GMT
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த வாரம் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு பீகாரில் 102 பேரும், அசாமில் 64 பேரும் பலியாகி உள்ளனர்.
பாட்னா:

பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கடந்த வாரம் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து உள்ளன. வெள்ளத்துக்கு இதுவரை 166 பேர் பலியாகி உள்ளனர். பீகார் மாநிலத்தில் 102 பேரும், அசாமில் 64 பேரும் இறந்து உள்ளனர்.

இந்த இரு மாநிலத்திலும் 1 கோடியே 11 லட்சம் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். பீகாரில் 12 மாவட்டங்களில் 72.78 லட்சம் பேரும், அசாமில் 18 மாவட்டங்களில் 38.37 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகாரில் சிதாமர்கி மாவட்டம் தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அங்கு 27 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக மதுபானி மாவட்டத்தில் 23 பேர் பலியாகி உள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். சிதாமர்கி மற்றும் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களுக்கு முதல்-மந்திரி நிதிஷ்குமார் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார்.

அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் வெள்ளத்துக்கு 141 விலங்குகள் உயிர் இழந்துள்ளன.

Tags:    

Similar News