செய்திகள்
ராணுவ தளபதி பிபின் ராவத்

சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் அத்துமீறினார்களா? - ராணுவ தளபதி பேட்டி

Published On 2019-07-13 12:01 GMT   |   Update On 2019-07-13 12:01 GMT
இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தார்கள் என்று வெளியான செய்திக்கு இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பதிலளித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் லடாக்கில் உள்ள டெம்சோ பகுதியில் சீன ராணுவ வீரர்கள் சிலர் கடந்த வாரம் அத்துமீறி நுழைந்ததாகவும் சிறிது நேரத்திலேயே அவர்கள் சீனப் பகுதிக்குள் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

கடந்த 6-ம் தேதி திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் பிறந்த தினத்தையொட்டி, லடாக் பகுதியில் உள்ள கிராமத்தில் திபெத் கொடியை அங்குள்ள திபெத்தியர்கள் சிலர் ஏற்றியதாகத் தெரிகிறது. இதையடுத்து, சீன ராணுவ வீரர்கள் தங்கள் வாகனத்தில் அப்பகுதிக்குள் நுழைந்தனர் என்று தகவல் வெளியானது. 

இந்நிலையில், இந்திய எல்லைக்குள் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்தார்கள் என்ற செய்தியில் உண்மையில்லை என ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சீன படையினர் தங்கள் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி வழியாக ரோந்து சென்றனர். அப்போது உள்ளூர் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். டெம்சோ செக்டாரில் உள்ள  திபெத்தியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது என்ன நடக்கிறது என்பதை சில சீனர்களும் காண வந்தனர். உண்மையில் எந்த அத்துமீறலும் நடைபெறவில்லை. அனைத்தும் இயல்பாகவே இருந்தது என தெரிவித்தார்.
Tags:    

Similar News