செய்திகள்
அமித்ஷா

பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல்

Published On 2019-07-03 10:50 GMT   |   Update On 2019-07-03 10:50 GMT
பா.ஜனதா தலைவர் அமித்ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விதிஷா:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்க அமித்ஷாவின் தேர்தல் வியூகம் தக்க பலன் அளித்தது.

இதையடுத்து அவருக்கு மத்திய உள்துறை மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. அமித்ஷா காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அமித் ஷாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் கன்ஜிபசோடா தொகுதி பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. லீனாஜெயின் இவருக்கு மர்ம நபரிடம் இருந்து மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது.

அதில் மத்திய மந்திரி அமித்ஷா, கன்ஜிபசோடா நகருக்கு வரும்போது வெடி குண்டு மூலம் கொல்லப்படுவார் என்றும் இதே போல் நீங்களும் (லீனா ஜெயின்) கொல்லப்படுவீர்கள் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது.

மேலும் பஸ்நிலையம், ரெயில் நிலையம் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்து இருந்தார். இதுகுறித்து லீனா ஜெயின் எம்.எல்.ஏ. போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து பஸ், ரெயில் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையில் ஈடுபட்டனர். மிரட்டல் கடிதத்தில் பெயர் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அக்கடிதத்தை எழுதிய நபர் யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News