செய்திகள்
வெற்றி களிப்பில் ஆளும் கட்சி தொண்டர்கள்

கேரளா உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணி அமோக வெற்றி

Published On 2019-06-28 13:34 GMT   |   Update On 2019-06-28 13:34 GMT
கேரளா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் இடதுசாரி கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் காலியாக உள்ள 44 உள்ளாட்சி இடங்களுக்கு ஜூன் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன

இந்த இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. அதில், ஆளும் கட்சி கூட்டணியான இடதுசாரி முன்னணி 22 இடங்களில் வெற்றி பெற்றது. காங். தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி17 இடங்களிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News