செய்திகள்

ஒஎன்ஜிசி விவகாரம்- புதுச்சேரி அரசைப்போல் தமிழக அரசும் அறிவிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Published On 2019-06-27 07:30 GMT   |   Update On 2019-06-27 07:30 GMT
புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி விண்ணப்பித்துள்ள நிலையில், புதுச்சேரி அரசைப் போல் தமிழக அரசும் தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மேலும் 104 இடங்களில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓ.என்.ஜி.சி நிறுவனம் மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் ஹைட்ரோகார்பன் திட்டங்களையே விவசாயிகளும், பொதுமக்களும் கடுமையாக எதிர்த்துவரும் நிலையில், இப்போது நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக 104 கிணறுகளை அமைப்பதை ஏற்க முடியாது.



தொடர்ந்து இதுபற்றி வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கும் பழனிசாமி அரசு, உடனடியாக தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும். ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கும் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி அரசைப் போல அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News