செய்திகள்

மாநிலங்களவை கூட்டத்தில் அமித் ஷா தூங்கினாரா?

Published On 2019-06-26 08:35 GMT   |   Update On 2019-06-26 08:35 GMT
மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மாநிலங்களவை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது தூங்கியதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.



மாநிலங்களவையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தூங்கியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் வைரலாகியுள்ளது. சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் உரையாற்றி கொண்டிருந்த போது, அமித் ஷா தூங்கி விழுந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் கூறப்படுகறது.



ஜனவரி 9, 2019 ஆம் தேதி நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் என அமித் ஷா உறங்கும் படங்கள் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை முழுமையாக பார்க்கும் போது, அமித் ஷா தன் தலையை அசைத்த நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களில் இந்த பதிவு அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இத்துடன் மேற்கு வங்க காங்கிரஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விவரம் பதிவிடப்பட்டுள்ளது. முன்னதாக இதே ட்விட்டர் அக்கவுண்ட்டில் இருந்து பாலம் இடிந்து விழுந்ததாக வைரலான விவரம் பொய் என நிரூபிக்கப்பட்டது. 

வைரலாகும் படங்கள் எடுக்கப்பட்ட வீடியோ 15 நிமிடங்கள் ஓடுகிறது. இதில் ரவிசங்கர் பிரசாத் உரையின் போது ஷா கண் சிமிட்டும் காட்சிகள், இருக்கையின் முன்புறம் எதையோ படிக்க முயலும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த வீடியோவை பார்க்கும் போது அமித் ஷா உறங்காமல் விழித்திருந்தது உறுதியாகி இருக்கிறது. இதனை உறுதிப்படுத்தும் ஸ்கிரீன்ஷாட்களை கீழே காணலாம்.



மேலே இடம்பெற்றிருக்கும் படங்களில் இருந்து அமித் ஷா மாநிலங்களவையில் உறங்கவில்லை என்பது தெளிவாகி இருப்பதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என்பதும் உறுதி செய்யப்படுகிறது. 

இணையத்தில் போலி செய்திகளை பரப்புவது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். பல சமயங்களில் போலி செய்திகளால் பலர் உயிரிழந்திருக்கின்றனர். போலி செய்திகளை எதிர்கொள்ளும் போது அவற்றை பரப்பாமல் இருப்பது அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க உதுவும்.

புகைப்படம் நன்றி: boomlive
Tags:    

Similar News