செய்திகள்
கோப்புப்படம்

எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்பதா?- தங்க தமிழ்ச்செல்வனுக்கு புகழேந்தி கண்டனம்

Published On 2019-06-25 04:54 GMT   |   Update On 2019-06-25 04:54 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று கூறிய தங்க தமிழ்ச்செல்வனுக்கு புகழேந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செய்தி தொடர்பாளரும், கர்நாடகா மாநில செயலாளருமான பெங்களூரு புகழேந்தி நிருபரிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என்று தற்போது தங்க தமிழ்ச்செல்வன் கூறி இருக்கிறார். பிளாஸ்டிக் ஒழிப்பில் முதல்-அமைச்சர் சாதனை படைத்திருப்பதாகவும் அவரை பாராட்டி இருக்கிறார்.

இதுவரை தங்க தமிழ்ச்செல்வனுக்கு அண்ணனாக இருந்த டி.டி.வி. தினகரனை, அவர் அண்ணன் இல்லை என்று மறந்துவிட்டு புதிய அண்ணனை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? இது புரியாத புதிராக இருக்கிறது.

தங்க தமிழ்ச்செல்வனின் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. அவரது கருத்துக்களை நான் கண்டிக்கிறேன்.

அவருக்கு நான் நண்பர் என்பதால் இந்த கருத்தை கூறுகிறேன். அ.தி.மு.க.வில் இருந்த ஒரே காரணத்துக்காக சிறைக்கு சென்ற சசிகலாவுக்கு துரோகம் செய்தவர்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று நடத்தி அவர்களை எதிரிகளாக கருதி தான் நாம் கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம்.


அந்த கட்சியில் இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் திடீரென்று பேச்சு மாறுவது அவர் அ.தி.மு.க.வுக்கு செல்ல இருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. அதனால் தான் அவர் தினகரனின் உதவியாளருடன் பேசிய ஆடியோ வெளியாகி இருக்கிறது. ஆனால் தங்க தமிழ்ச்செல்வன் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் அ.தி.மு.க.வில் சேருவதை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அவரது மகனும், எம்பி.யுமான ரவீந்திரநாத் குமாரும் எதிர்க்கிறார்கள் என்பதை அவர் உணர வேண்டும்.

சுயேட்சை வேட்பாளர் கருத்துக்கெல்லாம் நான் பதில் சொல்லவிரும்பவில்லை என்று ஓ.பன்னீர்செல்வமும், ரவீந்திரநாத்குமாரும் கூறி இருப்பதை அவர் நினைத்துப்பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News