செய்திகள்

ஓடும் ரெயிலில் மசாஜ் சேவை -விரைவில் தொடக்கம்

Published On 2019-06-08 10:20 GMT   |   Update On 2019-06-08 11:25 GMT
இந்தியன் ரெயில்வேயில் விரைவில் பயணிகள் ரெயிலில் பயணம் செய்யும்போது பயணிகளுக்கு மசாஜ் செய்யும் சேவை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
புது டெல்லி:

இந்தூரில் இருந்து புறப்படும் 39 ரெயில்களில் பயணிகள் பயணம் மேற்கொள்ளும்போது மசாஜ் சேவை செய்யும் வகையில் பணி ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.

இவற்றுள் டேராடூன் - இந்தூர் எக்ஸ்பிரஸ், புது டெல்லி-இந்தூர் எக்ஸ்பிரஸ், மற்றும் இந்தூர்-அமிர்தசரஸ் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களும் அடங்கும். இந்த சேவை குறித்து ரெயில்வேத்துறை செய்தி தொடர்பு இயக்குனர் கூறியதாவது:

ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மசாஜ் சேவை வழங்குவது வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும். ரெயில்வேத்துறையின் வருமானத்தை உயர்த்துவதோடு மட்டுமல்லாமல், இதனால் ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.



இந்த சேவை மூலம் ரெயில்வேத்துறை ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும். இதன்மூலம்  ரூ.90 லட்சம் வரை கூடுதல் வருமானம் கிடைக்கும். இந்த சேவைக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

15 முதல் 20 நாட்களுக்குள் இந்த சேவை தொடங்கப்பட்டு விடும். இந்த மசாஜ் சேவைக்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.100 வசூலிக்கப்படும். இந்த சேவை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.

ஒவ்வொரு கோச்சிலும் 4 முதல் 5 மசாஜ் செய்யும் பணியாளர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ரெயில்வேத்துறையின் ஐடி கார்டு வழங்கப்பட்டிருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News