செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்?- காங்கிரஸ் கேள்வி

Published On 2019-06-06 02:26 GMT   |   Update On 2019-06-06 02:26 GMT
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு தவறிவிட்டது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
புதுடெல்லி :

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட அம்சங்கள் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:-

கடந்த 7 நாட்களாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 13.65 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஆனால், பெட்ரோல், டீசல் விலை வெறும் 0.90 சதவீதம் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப இவற்றின் விலையை குறைக்காதது ஏன்?

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியின் பலனை பொதுமக்களுக்கு வழங்க மத்திய அரசு தவறிவிட்டது.

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றின் விலை விவகாரத்தில் புதிய அரசு தங்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News