செய்திகள்

காஷ்மீர் பனிமலை பகுதியில் கடமையாற்றும் இந்திய வீரர்களுடன் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சந்திப்பு

Published On 2019-06-03 09:56 GMT   |   Update On 2019-06-03 09:56 GMT
ராணுவ மந்திரியாக பதவியேற்ற பின்னர் இன்று முதல்முறையாக காஷ்மீர் வந்த ராஜ்நாத் சிங் சியாச்சென் பனிமலை பகுதியில் ராணுவ முகாம்களில் ஆய்வு செய்து வீரர்களுடன் கலந்துரையாடினார்.
ஜம்மு:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருடன் 57 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். முன்னாள் உள்துறை மந்திரியாக இருந்த ராஜ்நாத் சிங்கிற்கு இந்த முறை பாதுகாப்புத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, ராஜ்நாத் சிங் நேற்று முறைப்படி மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவியேற்று கொண்டார்.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ராஜ்நாத் சிங், தனது முதல் பயணமாக இன்று காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சியாச்சென் பனிமலைக்கு வந்தார். ராணுவ தளபதி பிபின் ராவத்தும் அவருடன் வந்திருந்தார்.



அங்குள்ள ராணுவ முகாம்களை பார்வையிட்ட ராஜ்நாத் சிங், அப்பகுதியில் கடமையின்போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த சுமார் 1100 வீரர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செய்து மலரஞ்சலி செலுத்தினார்.

முகாம்களில் உள்ள இந்திய வீரர்களுடன் கலந்துரையாடி அவர்களுடன் சிற்றுண்டி அருந்தியவாறு புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார்.
Tags:    

Similar News