செய்திகள்

மகாத்மா காந்தி குறித்து பெண் ஐஏஎஸ் அதிகாரி சர்ச்சைக்குரிய வகையில் டுவிட் செய்தி

Published On 2019-06-02 17:22 GMT   |   Update On 2019-06-02 17:22 GMT
மராட்டிய மாநிலத்தில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மராட்டிய மாநில பெண் ஐஏஎஸ் அதிகாரி நிதி சவுத்ரி, மும்பை மாநகராட்சியில் துணை நகராட்சி ஆணையராக பணியாற்றி வருகிறார். 

கடந்த மாதம் 17-ம் தேதி நிதி சவுத்ரி டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி நடக்கும் கொண்டாட்டங்கள் வழக்கத்தில் இல்லாதது. காந்தியின் உருவத்தை ரூபாய் நோட்டில் இருந்து நீக்க வேண்டிய நேரம் இதுவாகும். உலகில் உள்ள காந்தியின் சிலைகள் அகற்றப்பட வேண்டும். அவரின் பெயரில் இருக்கும் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சாலை ஆகியவற்றுக்கு வேறு பெயர் வைக்க வேண்டும். 

மகாத்மாவுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுவாகத்தான் இருக்கும் என குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் காந்தியை கொன்ற கோட்சேவுக்கு நன்றி எனவும் குறிப்பிட்டிருந்தார். இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் தான் செய்த ட்வீட் திரிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ள நிதி சவுத்ரி, காந்தியை ஒருபோதும் மரியாதை குறைவாக பேசியதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

Similar News