search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாதுராம் கோட்சே"

    எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    போபால்:

    மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை ‘தேச பக்தர்’ என்று கூறியதன் மூலம் போபால் தொகுதி பா.ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் சர்ச்சையில் சிக்கினார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் பணிகள் முடிந்தநிலையில், இது சிந்திக்க வேண்டிய நேரம். பிராயச்சித்தம் தேடும் செயலாக நான் மவுனம் அனுசரிக்கப்போகிறேன். கடுமையான விரதத்தை தொடங்கி விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கோட்சேவை பற்றி கமல் பேசி வருவது தேவையற்றது. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கட்சியே இல்லாமல் போய்விடும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் பேசியுள்ளார்.

    திருச்சி:

    திருச்சியில் நடைபெற்ற விழாவில் நடிகர் எஸ்.வி. சேகர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பொருளாதார அடிப்படையில் தான் இடஒதுக்கீடு கொண்டு வரவேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்தார். அவரது ஆசையை மோடி நிறைவேற்றி இருக்கிறார். இப்போது மோடி அஸ்திவாரம் தான் போட்டு இருக் கிறார். அதை கண்டே பலர் ஆடிப்போய் இருக்கிறார்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் திருடர்கள், கடத்தல் காரர்களுக்கு தான் பாதிப்பு.

    திருடர்களுக்கு போலீசை கண்டால் பிடிக்காது. அதனால் தான் எதிர்க்கட்சிகளுக்கு மோடியை பிடிக்க வில்லை. வெறும் அரசியல் மட்டுமே செய்து கொண்டு இருக்கக்கூடாது. அடுத்த தலைமுறையை பார்க்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறவர்களை தட்டி விடக்கூடாது.

    தமிழ்நாட்டில் மோடியை பற்றி பேசுவது அனைத்தும் கற்பனை கதைகள். மோடி ஓட்டு வங்கிக்காக அரசியல் செய்பவர் கிடையாது. தேர்தலில் மோடி 300 இடங்களுக்கு மேல் பெற்று மீண்டும் பிரதமராக வருவார்.

    மோடி கொண்டு வந்த பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அங்கீகரித்த தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நேரத்தில் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம். இந்து மதத்தை கேவலப்படுத்தக்கூடிய எந்த செயலையும் மற்ற மதத்தினர் ரசிப்பது இல்லை என்பது தான் உண்மை.


    இந்துக்கள் பொறுமைசாலிகள். ஆனால் சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை 23-ந்தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டு எண்ணும்போது தெரிந்து கொள்வார்கள். கோட்சேவை பற்றி கமல் பேசி வருவது தேவையற்றது. நான்கூட முன்பு கமல்ஹாசன் தேர்தலில் 6 சதவீத வாக்குகளை பெற்று தவிர்க்க முடியாத இடத்துக்கு வருவார் என்று கூறி இருந்தேன். ஆனால் அவர் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கமல்ஹாசனின் கட்சியே இல்லாமல் போய்விடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்பதன் மூலம் சாத்வி பிராக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் இந்தியாவின் ஆன்மாவை கொல்வதாக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சாத்வி பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, “நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும்” என குறிப்பிட்டார்.

    பின்னர் இந்த கருத்து தொடர்பாக கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் சாத்வி பிரக்யா சிங் தாக்குர்
    பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

    இந்நிலையில், 'நாதுராம் கோட்சே காந்தியின் உடலைத்தான் சுட்டுக் கொன்றார். ஆனால், நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்பதன் மூலம் சாத்வி  பிராக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் அகிம்சை, அமைதி, சகிப்புத்தன்மை உள்ளிட்ட இந்தியாவின் ஆன்மாவை கொல்கின்றனர்’ என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

    ‘அனைத்து விதமான அதிகாரம் மற்றும் அரசியலுக்கு எல்லாம் உயர்வானவர் காந்தி. குறுகிய கண்ணோட்டத்துடனான அரசியல் ஆதாயங்களுக்கு இடமளிக்காமல் ராஜநீதிக்கு உட்பட்ட வகையில் கட்சியில் இருந்து நீக்க பாஜக தலைமை உடனடியாக தீர்மானிக்க வேண்டும்’ எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே தேசபக்தர் என்ற சர்ச்சை கருத்தை தெரிவித்த பிரக்யாசிங்கிற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    மத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதீய ஜனதா கட்சி வேட்பாளருமான பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, “நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும்” என குறிப்பிட்டார்.

    மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேயை பிரக்யா சிங் தாக்குர் தேசபக்தர் என்று சான்று அளித்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் பிரக்யா சிங் தாக்குர் கருத்தை பாரதீய ஜனதா கட்சி ஏற்கவில்லை. கட்சியின் தலைமையில் இருந்து நெருக்கடி ஏற்பட்டதால் தனது கருத்துக்காக பிரக்யா சிங் மன்னிப்பு கோரினார். 

    இந்நிலையில் பிரதமர் மோடியும் பிரக்யா சிங்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “மகாத்மா காந்தியை அவமதிப்பு செய்த பிரக்யா சிங்கை மன்னிக்க முடியாது,” எனக் கூறியுள்ளார் பிரதமர் மோடி.
    மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் இன்று சாலை வழியாக பேரணி நடத்தி வாக்கு திரட்ட இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
    மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே’’ என்று பிரசாரத்தின்போது பேசினார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. மத்திய பிரதேசம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பிரக்யா சிங் தாகூரிடம் இதுகுறித்து உங்களது கருத்து என்ன? என்று நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது ‘‘கோட்சே தேசபக்தர்’’ என்று பதில்அளித்தார். மகாத்மா காந்தியை கொன்றவனை தேசபக்தர் என்பதா? என்று எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் எழுப்பின.

    மேலும், இந்திய தேர்தல் ஆணையம் மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையரிடம் இதுகுறித்து விரிவான அறிக்கை அளிக்கும்படி கேட்டது. அதனடிப்படையில் இன்று மத்திய பிரதேச மாநில தேர்தல் ஆணையர் பிரக்யா சிங் தாகூர் பேசியது குறித்து முழு அறிக்கை தயார் செய்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.



    கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. பிரக்யா சிங் இன்று புர்கான்பூரில் ‘ரோடு ஷோ’ நடத்தி வாக்கு திரட்ட முடிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர் தனது ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளார். அவருக்கு உடல் நலம் சரியில்லை. அதனால் ‘ரோடு ஷோ’ ரத்து செய்யப்பட்டுள்ளது என கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
    என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வாலையும், தலையும் கத்தரித்து போட்டால் யாரும் யாரையும் குற்றஞ்சொல்ல முடியும். கோட்சே குறித்து முன்பே பேசியுள்ளேன். தேர்தலில் வெற்றி நம்பிக்கை குறைந்ததால் பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர்.

    மெரினாவில் பேசியபோது கண்டுகொள்ளாத நிலையில் அரவக்குறிச்சியில் பேசியதை பெரிதுபடுத்தி விட்டனர். சூலூரில் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்திருப்பதிலும் அரசியல் உள்ளது. சூலூரில் பதற்றமான சூழ்நிலை இருந்தால், ஏன் தேர்தலை தள்ளி வைக்கக்கூடாது.

    கைதுக்கு நான் பயப்படவில்லை. என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும். அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது. கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோட்சே விவகாரத்தில் பிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை, சரித்திரம் பதில் சொல்லும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
    தேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே’’ என்று பேசினார். இந்தியா முழுவதும் இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதுகுறித்து பாரத பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியபோது, ‘‘ஒரு இந்து தீவிரவாதியாக இருக்க முடியாது’’ என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பிரதமர் கூறிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.



    அப்போது அவர் கூறுகையில் ‘‘பிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை. சரித்திரம் பதில் சொல்லும், இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியதில் தவறு இல்லை. இது உருவான சர்ச்சை அல்ல, உருவாக்கப்பட்ட சர்ச்சை’’ என்று பதில் அளித்தார்.
    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார்.
    போபால்:

    அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.மோகன்ராஜூக்கு ஆதரவாக அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கடந்த 12-ந்தேதி பள்ளப்பட்டி என்ற இடத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர்தான் நாதுராம் கோட்சே. அங்குதான் தீவிரவாதம் தொடங்குகிறது. காந்திஜியின் படுகொலைக்கு பதில் பெறத்தான் இங்கு வந்துள்ளேன்” என கூறினார்.

    அவர் இவ்வாறு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பாரதீய ஜனதா, அ.தி.மு.க. கட்சிகளும் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் போபால் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் பிரக்யா சிங், ‘நாதுராம் கோட்சேவை தீவிரவாதி என கூறியவர்களுக்கு தேர்தலில் தக்க பதிலடி தரப்படும். கோட்சே ஒரு சிறந்த தேச பக்தர். அவர் தேச பக்தராக தான் இருந்தார். இருக்கிறார். இனியும் இருப்பார்’ என கூறினார்.



    பிரக்யா சிங்கின் பேச்சுக்கு பாரதீய ஜனதா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் தெரிவித்தார்.

    மேலும் பிரக்யா சிங் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சிறிது நேரத்திலேயே அவர் மன்னிப்பு கேட்டார்.

    மத்திய பிரதேச மாநில பாரதீய ஜனதா கட்சித்தலைவர் ராகேஷ் சிங் இதுகுறித்து கூறும்போது, “இது ஒரு பிரச்சினை அல்ல. ஆனாலும் அவர் மன்னிப்பு கேட்டு விட்டார். தனது கருத்தை திரும்பப்பெற்றுக்கொண்டார்” என்றார்.

    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    பாஜக செய்தி தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    கோட்சே பற்றி பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை. பிரக்யா சிங் தனது கருத்துக்கு பொது வெளியில் மன்னிப்பு கோர வேண்டும். கோட்சே பற்றிய கருத்து தொடர்பாக பிரக்யாசிங்கிடம் பாஜக சார்பில் விளக்கம் கேட்கப்படும். 

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர். அவர் தேச பக்தராக இருந்தார். இருக்கிறார். இருப்பார் என்று போபால் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யாசிங் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சிலையை காந்தி ஜெயந்தி தினத்தில் வைக்க முயன்றதால் 4 பேர் கைது செய்யப்பட்டனர். #GandhiJayanti #MahatmaGandhi
    அலகாபாத்:

    தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் அவரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேயின் உருவ சிலையை வைக்க முயற்சி நடந்தது.

    உத்தரபிரதேச மாநிலம் சித்ரா கூட் மாவட்டத்தில் சக்வாரா என்ற கிராமத்தில் ராஷ்டீரிய சனாதன் தள் அமைப்பினர் கோட்சே சிலை வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர். ராஷ்ட்டீரிய சனாத்தன் தள் அமைப்பின் சித்ரகூட் மண்டல தலைவர் ராமேந்திராவுக்கு சொந்தமான இடத்தில் அந்த சிலை நிறுவப்பட இருந்தது.

    அதை அறிந்த கிராம மக்கள் உஷாராயினர். இது குறித்து சித்ரகூட் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமாரிடம் புகார் செய்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் கோட்சே சிலையை நிறுவ விடாமல் தடுத்து நிறுத்தினர். சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது.

    அது தொடர்பாக ராஷ்ட்டீரிய சனாதன் தள் அமைப்பின் நிறுவன உறுப்பினர் மற்றும் இணை அமைப்பாளர் பிரிஜேஷ் பாண்டே உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

    அவர்களில் 2 பேர் சித்ராகூட் பகுதியை சேர்ந்தவர்கள் ஒருவர் புஷார் பகுதியையும், மற்றொருவர் பாண்டா மாவட்டத்தையும் சேர்ந்தவர் ஆவார். கோட்சே சிலை நிறுவ இருந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #GandhiJayanti #MahatmaGandhi
    ×