என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஐடி"

    • கடந்த மார்ச் மாதம் என்.ஐ.டி. வளாகத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    • மாணவர் விவகார கவுன்சில் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது என்றார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ( என்.ஐ.டி.) கல்லூரி உள்ளது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் என்.ஐ.டி. வளாகத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்த நடைமுறைக்கு மாணவர்களில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் மார்ச் 20-ந் தேதி அன்று கல்லூரியின் நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது பணிக்கு வந்த கல்லூரி ஊழியர்களை வளாகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இதனால் கல்லூரி அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டதாக பதிவாளர் கருத்து தெரிவித்தார்.

    மேலும் போராட்டத்திற்கு காரணமான 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அவர்கள் தங்கள் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்ட நோட்டீசில், உங்கள் தவறான நடத்தையால் கல்லூரிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை வசூலிக்க எங்களுக்கு உரிமை உண்டு என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் 5 மாணவர்களுக்கும் ரூ.33 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக என்.ஐ.டி.மீடியா செல் தலைவர் டாக்டர் சுனிதாவை தொடர்பு கொண்டபோது, மாணவர்களுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வழங்கப்படவில்லை. ஆனால் மாணவர் விவகார கவுன்சில் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது என்றார்.

    • கோழிக்கோடில் இயங்கும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இயந்திர பொறியியல் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சைஜா ஆண்டவன்.
    • இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சேவைப் பற்றி பெருமைப்படுகிறேன்

    கேரள மாநிலம் கோழிக்கோடில் இயங்கும் மத்திய அரசு கல்வி நிறுவனமான தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இயந்திர பொறியியல் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பேராசிரியராக பணியாற்றி வந்தவர் சைஜா ஆண்டவன். இவர் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை புகழ்பாடும் கமெண்ட் ஒன்றை இவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார்.

    கடந்த ஜனவரி 30, 2024, காந்தியின் நினைவு தினத்தன்று சைஜா ஆண்டவன் பேஸ்புக்கில், "இந்தியாவைக் காப்பாற்றியதற்காக கோட்சேவைப் பற்றி பெருமைப்படுகிறேன்" என்று ஒரு கருத்தைப் பதிவிட்டார். இதற்காக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வன்முறையைத் தூண்டும் நோக்கதுடன் கருத்து தெரிவித்ததாக இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 153 இன் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

    தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளிவந்தார். தனது கருத்து குறித்து பேசிய சைஜா, காந்திஜியின் கொலையைப் பாராட்டுவதற்காக நான் கருத்து தெரிவிக்கவில்லை. நான் ஒருபோதும் அவ்வாறு செய்ய விரும்பவில்லை. கோட்சேவின் " நான் ஏன் காந்தியைக் கொன்றேன்" என்ற புத்தகத்தைப் படித்திருந்தேன்.

    கோட்சேவும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்தான். அவரது புத்தகத்தில் சராசரி மனிதனுக்குத் தெரியாத ஏராளமான தகவல்களும் வெளிப்பாடுகளும் உள்ளன. கோட்சே தனது புத்தகத்தில் நமக்கு அறிவூட்டியுள்ளார் என்றும் தான் எந்த அரசியல் கட்சியையும் சார்தவர் இல்லை என்றும் தான் கல்வியாளர் மட்டுமே என்றும் தனது கருத்தை நியாயப்படுத்தினார்.

    இந்நிலையில் பேராசிரியர் சைஜா தற்போது தேசிய தொழில்நுட்பக் கழகத்தின், திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு துறை டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 

    ×