search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kailash Satyarthi"

    எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என பிரக்யா சிங் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
    போபால்:

    மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவை ‘தேச பக்தர்’ என்று கூறியதன் மூலம் போபால் தொகுதி பா.ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் சர்ச்சையில் சிக்கினார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்டார்.

    இந்நிலையில், அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது வார்த்தைகளால் எந்த தேசியவாதியாவது பாதிக்கப்பட்டு இருந்தால், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் பணிகள் முடிந்தநிலையில், இது சிந்திக்க வேண்டிய நேரம். பிராயச்சித்தம் தேடும் செயலாக நான் மவுனம் அனுசரிக்கப்போகிறேன். கடுமையான விரதத்தை தொடங்கி விட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்பதன் மூலம் சாத்வி பிராக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் இந்தியாவின் ஆன்மாவை கொல்வதாக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    மத்தியப்பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான சாத்வி பிரக்யா சிங் தாக்குர் டெலிவிஷன் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என கமல்ஹாசன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், “நாதுராம் கோட்சே தேச பக்தராக இருந்தார்; இருக்கிறார்; அப்படியே தொடர்ந்து இருப்பார்” என பதில் அளித்தார். அதுமட்டுமின்றி, “நாதுராம் கோட்சேயை இந்து தீவிரவாதி என்று சொல்கிறவர்கள், தங்களை பார்க்கட்டும். அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பதிலடி கிடைக்கும்” என குறிப்பிட்டார்.

    பின்னர் இந்த கருத்து தொடர்பாக கடுமையான எதிர்ப்பு கிளம்பியதால் சாத்வி பிரக்யா சிங் தாக்குர்
    பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்.

    இந்நிலையில், 'நாதுராம் கோட்சே காந்தியின் உடலைத்தான் சுட்டுக் கொன்றார். ஆனால், நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்பதன் மூலம் சாத்வி  பிராக்யா சிங் தாக்குர் போன்றவர்கள் அகிம்சை, அமைதி, சகிப்புத்தன்மை உள்ளிட்ட இந்தியாவின் ஆன்மாவை கொல்கின்றனர்’ என நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

    ‘அனைத்து விதமான அதிகாரம் மற்றும் அரசியலுக்கு எல்லாம் உயர்வானவர் காந்தி. குறுகிய கண்ணோட்டத்துடனான அரசியல் ஆதாயங்களுக்கு இடமளிக்காமல் ராஜநீதிக்கு உட்பட்ட வகையில் கட்சியில் இருந்து நீக்க பாஜக தலைமை உடனடியாக தீர்மானிக்க வேண்டும்’ எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தியுள்ளார்.
    இணையம் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஆபாசப் படங்கள் 800 கோடி அமெரிக்க டாலர் தொழிலாக உருவெடுத்துள்ளதாக நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். #ChildSexualAbuse #KailashSatyarthi
    போபால்:

    இன்றைய நவீன காலங்களில் இணையம் ஒரு இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், அதனால் ஏற்படும் ஆபத்துகளும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக இணையம் என்பது குறித்த அடிப்படை புரிதல் இல்லாத இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணையத்தின் பாதிப்புகளை மட்டுமே அதிகம் அறுவடை செய்கிறார்கள்.

    மறுபுறம், சிறுவர்கள் மீதான இணையவழி பாலியல் குற்றங்கள் மற்றும் சிறுவர்களை கொண்டு எடுக்கப்படும் ஆபாச படங்களும் இணையத்தில் மிகப்பெரிய தொழிலாக மாறியுள்ளது. இதுகுறித்து மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவர்கள் நல ஆர்வலரும், நோபல் பரிசு வென்றவருமான கைலாஷ் சத்யார்த்தி கூறியிருப்பதாவது:-

    ‘இணையதளம் மூலமான குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் ஆபாசப் படங்களை தடுக்க சர்வதேச அமைப்பிலான கண்காணிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். குழந்தைகள் ஆபாச படம், குழந்தைகள் கடத்தல் 800 கோடி டாலர் அளவிலான தொழிலாக உருவெடுத்துள்ளது. இவற்றைத் தடுக்க உலக அளவில் உறுதியான கண்காணிப்பு அமைப்பு இல்லை. அந்தந்த நாட்டு அரசுகள் இவற்றை ஆரம்ப நிலையிலேயே களைய  நடவடிக்கை எடுக்க வேண்டும்.



    இதுபோன்ற சமூக விரோத அமைப்புகள் அதிநவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வரும் நிலையில், போலீசாரிடம் இன்னும் பழைய தொழில்நுட்பங்களே இருக்கின்றன. சர்வதேச அளவில் குழந்தைக் கடத்தல்காரர்கள் குறித்த விவர அறிக்கையை இண்டர்போல் அமைப்பும் உருவாக்க வேண்டும்’.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #ChildSexualAbuse #KailashSatyarthi
    அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு சங்தோக்பா மனிதாபிமான விருதையும், ரூ.1 கோடி பரிசையும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
    சூரத்:

    சமூக முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ணா அறக்கட்டளை சார்பில் ‘சங்தோக்பா மனிதாபிமான விருது’ என்ற விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இவ்விருது வழங்கும் விழா குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்றது.

    அதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்திக்கு விருதையும், ரூ.1 கோடி பரிசையும் வழங்கினார்.

    கைலாஷ் சத்யார்த்தி, அந்த விருதை குழந்தைகளுக்கு அர்ப்பணிப்பதாக அறிவித்தார். பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சட்ட, மருத்துவ உதவி அளிப்பதற்காக, தான் தொடங்கிய நிதியத்துக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை வழங்கினார்.
    ×