செய்திகள்

பஞ்சாப் மந்திரி சித்துவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

Published On 2019-05-02 01:25 GMT   |   Update On 2019-05-02 01:25 GMT
பிரதமரை திருடன் என கூறிய பஞ்சாப் மந்திரி சித்துவின் பேச்சை கேட்டறிந்த தேர்தல் கமிஷன் சித்துவுக்கு நோட்டீஸ் வழங்கியது. #NavjotSinghSidhu #ElectionCommission #PMModi
புதுடெல்லி:

குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளரும், பஞ்சாப் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து, பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்திருந்தார். இதுபற்றி பா.ஜனதா தொண்டர் தேர்தல் கமிஷனில் புகார் செய்தார். சித்துவின் பேச்சை கேட்டறிந்த தேர்தல் கமிஷன் சித்துவுக்கு நோட்டீஸ் வழங்கியது.

அதில், தேர்தல் நடத்தை விதிகளின்படி பிரசாரத்தில் எதிரணியினரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது. எனவே இந்த புகார் குறித்து 2-ந் தேதிக்குள் (இன்றைக்குள்) விளக்கம் அளிக்க வேண்டும். தவறினால் தேர்தல் கமிஷன் இந்த புகாரின் மீது ஒரு முடிவை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த மாதம், முஸ்லிம் வாக்காளர்கள் பிரதமர் மோடியை தோற்கடிக்க வாக்களிக்க வேண்டும் என்று கூறியதற்காக தேர்தல் கமிஷன் சித்துவுக்கு 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.   #NavjotSinghSidhu #ElectionCommission #PMModi 
Tags:    

Similar News