செய்திகள்

பாலகோட் தாக்குதலுக்கு மோடியை ஏன் பாராட்டக்கூடாது? - ராஜ்நாத்சிங் கேள்வி

Published On 2019-03-30 08:29 GMT   |   Update On 2019-03-30 08:29 GMT
பாலகோட் தாக்குதல் நடத்திய பிரதமர் மோடியை ஏன் பாராட்டக்கூடாது என்று தேர்தல் பிரசார பேரணியில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கேள்வி எழுப்பினார். #LokSabhaElections2019 #RajnathSingh
அகமதாபாத்:

குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா தலைவர் அமித்ஷா வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது நடந்த தேர்தல் பிரசார பேரணியில் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது 1971-ம் ஆண்டில் நமது ராணுவத்தின் வீர தீரத்தால் பாகிஸ்தான் 2 ஆக பிரிந்தது. ஒன்று பாகிஸ்தான் மற்றொன்று வங்காளதேசம் ஆனது. போருக்கு பிறகு பிரதமராக இருந்த இந்திரா காந்தியை நமது தலைவர் வாஜ்பாய் பாராட்டினார். அப்போது இந்திரா காந்தி நாடு முழுவதும் பாராட்டப்பட்டார்.

அப்படி இருக்கும்போது பாலகோட் தாக்குதல் நடத்திய பிரதமர் மோடியை ஏன் பாராட்டக்கூடாது. புல்வாமாவில் தாக்குதல் நடத்தி 40 முதல் 42 ராணுவ வீரர்களை தீவிரவாதிகள் கொன்றனர். அந்த நேரத்தில் அவர்களை நமது ராணுவம் தாக்க முழு சுதந்திரம் கொடுத்தவர் பிரதமர் மோடி என குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #RajnathSingh


Tags:    

Similar News