செய்திகள்

போலீஸ் அதிகாரி இடமாற்றம்- தேர்தல் கமி‌ஷனின் உத்தரவை ரத்து செய்தார் சந்திரபாபுநாயுடு

Published On 2019-03-28 09:32 GMT   |   Update On 2019-03-28 09:32 GMT
ஆந்திராவில் போலீஸ் அதிகாரி வெங்கடேஷ்வரராவின் இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரத்து செய்தார்.
விஜயவாடா:

ஆந்திர மாநிலம் 175 சட்டசபை தொகுதிக்கும், 25 பாராளுமன்ற தொகுதிக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 11-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

தேர்தலையொட்டி ஆந்திராவில் உள்ள உயர் அதிகாரிகளாக போலீஸ் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் இடம் மாற்றம் செய்ய உத்தரவிட்டது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் தேர்தல் கமி‌ஷன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்தது. அப்படி இடமாற்றம் செய்யப்பட்டதில் உளவுத்துறை டி.ஜி.பி. வெங்கடேஷ்வரராவும் ஒருவர்.

இந்த நிலையில் போலீஸ் அதிகாரி வெங்கடேஷ்வரராவின் இடமாற்ற உத்தரவை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ரத்து செய்தார்.

தேர்தல் ஆணையம் இடம் மாற்றம் செய்து உத்தரவிட்டதை அவர் ரத்து செய்தார்.

இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இடமாற்றம் தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. #LSPolls #chandrababunaidu #ElectionCommission
Tags:    

Similar News