செய்திகள்
கோப்புப்படம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை விசாரணை

Published On 2019-02-07 06:29 GMT   |   Update On 2019-02-07 10:26 GMT
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். #INXMediaCase #KartiChidambaram
புதுடெல்லி:

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.



இவ்வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கார்த்தி சிதம்பரத்துக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜரானார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் அப்ரூவர் ஆக இந்திராணி விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #INXMediaCase #KartiChidambaram
Tags:    

Similar News