செய்திகள்

குஜராத்தில் பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு 34 பேர் பலி

Published On 2019-02-02 10:48 GMT   |   Update On 2019-02-02 10:48 GMT
குஜராத்தில் வேகமாக பரவி வரும் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர். #Gujaratswineflu
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சில மாவட்டங்களில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி இந்த நோயின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது.  கடந்த ஒரு மாதத்தில் 737 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதாக உறுதியானது.

ஜனவரி 1 முதல் இன்று வரை பன்றிக் காய்ச்சலுக்கு 34 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் இருவர் ராஜ்காட் பகுதியையும் மற்ற 2 பேர் வதோதரா பகுதியை சேர்ந்தவரும் ஆவர்.

இன்று 41 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டிருந்த 737 நோயாளிகளில், 413 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 290 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குஜராத்தில் நிலவி வரும் கடுமையான குளிரின் காரணமாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.   #Gujaratswineflu
Tags:    

Similar News