செய்திகள்

பிரியங்கா வருகைக்கு அகிலேஷ் ஆதரவு- ராகுல் எடுத்த சரியான முடிவு

Published On 2019-01-27 10:30 GMT   |   Update On 2019-01-27 10:30 GMT
பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை சமாஜ்வாடி கட்சி வரவேற்கிறது. சரியான முடிவு எடுத்தமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வாழ்த்துகிறேன் என்று அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். #akhilesh #rahulgandhi #Priyanka

லக்னோ:

காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி கடந்த 23-ந்தேதி நியமிக்கப்பட்டார். அவர் கிழக்கு உத்தரபிரதேசத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது அரசியல் பிரவேசத்தை கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். பிரியங்காவால் உத்தரபிரதேசத்தில் மாயாவதி- அகிலேஷ் யாதவ் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனால் அகிலேஷ் யாதவ் பிரியங்காவின் அரசியல் பிரவேசம் பற்றி கருத்து தெரிவிக்காமல் மவுனமாக இருந்து வந்தார். நேற்று முதல் முறையாக பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், “பிரியங்காவின் அரசியல் பிரவேசத்தை சமாஜ்வாடி கட்சி வரவேற்கிறது. சரியான முடிவு எடுத்தமைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வாழ்த்துகிறேன்” என்றார்.


அதே சமயம் ராகுல்காந்தி சமீபத்தில் மாயாவதி- அகிலேஷ் யாதவை மதிக்கிறேன் என்று கூறியிருப்பதால் காங்கிரசுடன் கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளதா? என்று அகிலேஷ் யாதவிடம் கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

தொடர்ந்து அகிலேஷ் யாதவ் பதில் அளிக்கையில் பா.ஜனதாவை மட்டுமே விமர்சித்தார். காங்கிரஸ் பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தவிர்த்தார். #akhilesh #rahulgandhi #Priyanka

Tags:    

Similar News