செய்திகள்

10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Published On 2019-01-25 07:12 GMT   |   Update On 2019-01-25 07:12 GMT
பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது. #SC
புதுடெல்லி:

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து உள்ளார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு அடுத்தமாதம் 1-ந்தேதியில் இருந்து அமலாகிறது.  இதுதொடர்பாக மத்திய அரசு, மத்திய சமூக நலத்துறை அமைச்சகம் சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது.  

10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை தடை செய்ய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு தெரிவித்து உள்ளது. #SC
Tags:    

Similar News