செய்திகள்

பிரதமர் யார் என்பதை உபி முடிவு செய்யும்- மாயாவதி

Published On 2019-01-17 09:16 GMT   |   Update On 2019-01-17 09:16 GMT
மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதையும், யார் பிரதமர் என்பதையும் உத்தரபிரதேச மாநிலம் தான் முடிவு செய்யும் என்று மாயாவதி பேசினார். #Mayawati
லக்னோ:

உத்தரபிரதேசத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்து உள்ளன.

மாயாவதி தனது 67-வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி தனது கட்சி தொண்டர்கள் முன்பு பேசினார்.

அப்போது பிரதமர் யார் என்பதை உத்தரபிரதேச மாநிலம் தான் முடிவு செய்யும் என்றார். இது தொடர்பாக மாயாவதி பேசியதாவது:-

பகுஜன் சமாஜ்- சமாஜ் வாடி கட்சி தொண்டர்கள் கருத்து வேறுபாடுகள், தனிப்பட்ட காரணங்களை மறந்து பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்காக இணைந்து பாடுபடவேண்டும். எனது பிறந்த நாள் பரிசாக இந்த வெற்றியை நீங்கள் எனக்கு கொடுக்க வேண்டும்.

மத்தியில் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பதையும், யார் பிரதமர் என்பதையும் உத்தரபிரதேச மாநிலம் தான் முடிவு செய்யும்.

எங்கள் கூட்டணியின் வெற்றிக்கு முஸ்லிம்களின் ஓட்டு முக்கிய பங்கு வகிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிறந்த நாளையொட்டி மாயாவதியை அகிலேஷ் யாதவ் நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார். மலர் கொத்தும் வழங்கினார். அவர்கள் சுமார் 1 மணி நேரம் பேசினார்கள். #Mayawati
Tags:    

Similar News