செய்திகள்

மோடியின் கட்டளையை சந்திரசேகரராவ் நிறைவேற்றுகிறார் - சந்திரபாபு நாயுடு தாக்கு

Published On 2018-12-31 05:49 GMT   |   Update On 2018-12-31 06:48 GMT
பிரதமர் மோடியின் கட்டளையை சந்திரசேகரராவ் நிறைவேற்றுகிறார் என்று ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #PMModi #ChandrababuNaidu

விஜயவாடா:

ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு விஜயவாடாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தெலுங்கானா மாநில முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவ், பிரதமர் மோடி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியின் கட்டளையை ஏற்று செயல்படுகிறார்.

கே.சந்திரசேகரராவ் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதனால் அவரை மிரட்டி பிரதமர் மோடி பணிய வைக்க பார்க்கிறார். சந்திரசேகரராவும் ஊழல் வழக்கில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்.

ஆந்திராவில் தெலுங்கு தேசம் அரசின் சாதனைகளால் பொறாமை அடைந்த மோடியும், ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியும், சந்திரசேகரராவை தூண்டி விட்டுள்ளனர்.

 


சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு ராஷ்டீரிய சமிதி கட்சிகள் கூட்டணி அமைக்க உள்ளன. ஆகவே தேர்தல் பிரசாரத்தின்போது சந்திரசேகரராவ் ஆந்திராவுக்கு வரட்டும். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ஆனால் மக்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்குவார்கள். இருந்தாலும் தெலுங்குதேசம் கட்சியில் இருந்துதான் தனது அரசியல் வாழ்வை தொடங்கினார் என்பதை அவர் மறந்து விடக்கூடாது.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைத்தது. அதற்கு நான் ஒரு சந்தர்ப்பவாதி என சந்திரசேகரராவ் தெரிவித்து இருந்தார். அதை நான் மறுக்கிறேன்.

ஆனால் சந்திரசேகரராவ் ஒன்றை மறந்து விடக்கூடாது. தெலுங்கானா மாநிலம் உருவாக மத்திய அரசு ஒப்புக் கொண்டால் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க தயார் என அவர் வாக்குறுதி அளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார். #PMModi #ChandrababuNaidu

Tags:    

Similar News