செய்திகள்

சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசியா கிளை - வாரணாசியில் மோடி திறந்து வைத்தார்

Published On 2018-12-29 13:13 GMT   |   Update On 2018-12-29 13:13 GMT
சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசியா பிராந்திய மையத்தை வாரணாசி நகரில் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். #PMModi #Modidedicates #IRRI
லக்னோ:

வாரணாசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், அடிக்கல் நாட்டவும் இன்று பிற்பகல் வாரணாசி நகருக்கு வந்தார்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் இயங்கிவரும் சர்வதேச அரிசி உற்பத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் தெற்காசியா பிராந்திய மையத்தை வாரணாசியில் அவர் திறந்து வைத்தார்.

குறைந்த அளவிலான தண்ணீரை பயன்படுத்தி குறைவான சர்க்கரை சத்துகொண்ட ஊட்டச்சத்து மிக்க நெல் வகைகளை உருவாக்க இந்திய விவசாயிகளுக்கு இந்த ஆராய்ச்சி மையம் உறுதுணையாக இருக்கும் என இந்த திறப்புவிழாவில் பேசிய மோடி குறிப்பிட்டார். 

180 கோடி ரூபாய் மதிப்புள்ள 15 புதிய திட்டங்களை தொடங்கி வைத்த அவர், 98 கோடி ரூபாய் மதிப்பில் 14 புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். #PMModi #Modidedicates #IRRI
Tags:    

Similar News