செய்திகள்

சபரிமலைக்கு இளம்பெண்கள் வர வேண்டாம் - தந்திரி கண்டரரு ராஜீவரு பேட்டி

Published On 2018-11-16 07:55 GMT   |   Update On 2018-11-16 07:55 GMT
சபரிமலையில் அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும் என்றால் தயவு செய்து இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று தந்திரி கண்டரரு ராஜீவரு கேட்டுக் கொண்டுள்ளார். #SabarimalaTemple #TantriKandararuRajeevaru
திருவனந்தபுரம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த செப்டம்பர் மாதம் 28-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஐயப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள், காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த பிரச்சினையில் சுமூக தீர்வு காண அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் கூட்டினார்.

இதில் கலந்து கொண்ட எதிர்கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மறுஆய்வு மனு விசாரணைக்கு வரும் ஜனவரி 22-ந்தேதி வரை ஒத்திவைக்க வற்புறுத்தினார்கள். ஆனால் அதை பினராயி விஜயன் ஏற்க மறுத்ததால் அந்த கூட்டம் தோல்வியில் முடிந்தது.
இதே போல பந்தளம் மன்னர் குடும்பம் மற்றும் சபரிமலை தந்திரிகளுடன் பினராயி விஜயன் நடத்திய ஆலோசனை கூட்டத்திலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையில் சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு இது பற்றி கூறும்போது, சபரிமலையில் அசம்பாவிதத்தை தவிர்க்க வேண்டும் என்றால் தயவு செய்து இளம்பெண்கள் யாரும் சபரிமலைக்கு வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார். #SabarimalaTemple #TantriKandararuRajeevaru 

Tags:    

Similar News