செய்திகள்

போதையுடன் வந்த ஏர் இந்தியா துணை விமானி: டெல்லி - பாங்காங் விமானம் அவசரமாக தரையிறக்கம்

Published On 2018-11-11 13:18 GMT   |   Update On 2018-11-11 13:18 GMT
டெல்லியில் இருந்து பாங்காங் நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் இருந்த துணை விமானி மது போதையில் இருந்ததால் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #DelhiBangkokflight #AirIndiacopilot #preflightTest #BreathAnalyserTest
புதுடெல்லி:

ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று பிற்பகல் 1.15 மணிக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் துணை விமானியாக இருந்த அரவிந்த் கத்பாலியா என்பவர் மது போதை தொடர்பான பரிசோதனை கருவிக்கு ‘டிமிக்கி’ கொடுத்துவிட்டு விமானத்தில் ஏறிச் சென்றது டெல்லி விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, பறந்து கொண்டிருந்த விமானத்தை உடனடியாக தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

விமானம் தரையிறங்கியதும் அரவிந்த் கத்பாலியாவிடம் 'பிரீத் அனலைஸர்’ கருவி மூலம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் மது போதையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்திந்திய விமானிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. #DelhiBangkokflight  #AirIndiacopilot  #preflightTest #BreathAnalyserTest
Tags:    

Similar News