search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏர் இந்தியா விமானம்"

    • இவ்வளவு பணம் செலுத்திய பிறகும் குறைந்த பட்சம் சரியான இருக்கையாவது எதிர்பார்க்க முடியாதா? என்று பதிவிட்டிருந்தார்.
    • பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.

    ஏர் இந்தியா விமான பயணத்தின் போது உடைந்த இருக்கைகள் மற்றும் குஷன் வசதி இல்லாத இருக்கைகள் தொடர்பாக கடந்த சில நாட்களாக பயணிகள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் டெல்லியில் இருந்து பெங்களூரு சென்ற ஏர்இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் உடைந்த இருக்கை தொடர்பாக பதிவிட்ட பதிவு தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பயனர் ஜன்னலோர இருக்கைக்காக கூடுதலாக ரூ.1,000 செலுத்தி உள்ளார். ஆனால் விமானத்தில் ஏறியதும் அவரது இருக்கை உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இருக்கையை புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர் தனது பதிவில், ஏப்ரல் 4-ந் தேதி டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சென்ற போது ஜன்னலோர இருக்கைகக்காக கூடுதலாக ரூ.1,000-ம் செலுத்தினேன். ஆனால் அதன் பிறகு எனது இருக்கை உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

    இவ்வளவு பணம் செலுத்திய பிறகும் குறைந்த பட்சம் சரியான இருக்கையாவது எதிர்பார்க்க முடியாதா? என்று பதிவிட்டிருந்தார். மேலும் தனது பதிவுடன் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்தையும் போஸ்ட்டில் சேர்ந்திருந்தார்.

    அவரது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலானதை தொடர்ந்து பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து ஏர்இந்தியா நிறுவனம் சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், ஏமாற்றம் அளிக்கும் அனுபவத்திற்கு வருந்துகிறோம். தயவு செய்து உங்கள் முன்பதிவு விபரங்களை எங்களுக்கு மெசேஜ் செய்யுங்கள். சரிபார்த்து உங்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

    • தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
    • டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்தால் ஒரு வாரத்திற்கு பிறகுதான் பணம் திரும்ப கிடைக்கிறது என்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    துபாயில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 8.45 மணிக்கு துபாயில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் புறப்படவில்லை.

    தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்பு வெகுநேரம் ஆகியபடி இருந்தாால், பயணிகள் எதிர்ப்பு தெரவித்தனர். இதையடுத்து அந்த விமானதத்தில் பயணிக்க இருந்த அனைத்து பயணிகளும் அங்கிருந்த ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அந்த விமானம் திங்கட்கிழமை 2.45 மணிக்கு தான் துபாயில் இருந்து புறப்பட்டுள்ளது. சுமார் 30 மணி நேர தாமத்திற்கு பிறகு அந்த விமானம் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு வந்தது. இதனால் அதில் பயணித்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    பலர் தாங்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் அந்த விமானத்தில் பயணம் செய்த 2 பேரின் திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது. அந்த பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமண நிச்சயதார்த்ததம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்துள்ளது.

    அதில் கலந்துகொள்வதற்காக அந்த பயணிகள் முன்கூட்டியே விமானத்தில் டிக்கெட் எடுத்திருக்கிறார்கள. ஆனால் துரதிஷ்டவசமாக துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வரவேண்டிய ஏர் இந்தியா விமானம் திங்கட்கிழமையே புறப்பட்ட காரணத்தால், அவர்கள் திட்டமிட்டபடி நிச்சயதார்த்தம் நடந்த தினத்தில் ஊருக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது.

    இதனால் அவர்களது நிச்சயதார்த்தம் அன்றைய தினம் நடக்கவில்லை. வேறொரு நல்ல நாளில் அவர்களது திருமண நிச்சயதார்த்தத்தை நடத்த, அவர்களது குடும்பத்தினர் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கக்கூடிய ஏர் இந்தியா விமானம் அடிக்கடி தாமதமாக இயக்கப்படுவதாகவும், விமானம் தாமதமாகும் பட்சத்தில் அதுபற்றி உடனடியாக பதிலளிப்பதில்லை எனவும், டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்தால் ஒரு வாரத்திற்கு பிறகுதான் பணம் திரும்ப கிடைக்கிறது என்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வான்வழியில் பயணித்த நிலையில் தரையிறக்கம்.
    • விமானம் தாமதத்தால் நேற்று இரவு 9.30 மணி அளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

    பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட ஏஐ309 போயிங் விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் மெல்போர்னுக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    போயிங் ட்ரீம்லைனருடன் இயக்கப்பட்ட விமானம் AI309, உடல்நிலை சரியில்லாத பயணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை

    மெல்போர்னில் இறக்கிவிட்டு மீண்டும் புறப்பட்டது.

    டெல்லிக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் நேற்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வான்வழியில் பயணித்த நிலையில் மருத்துவ அவசரநிலை காரணமாக மெல்போர்னுக்கு திரும்பியதாக விமான நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    விமானம் தாமதத்தால் நேற்று இரவு 9.30 மணி அளவில் டெல்லி விமான நிலையத்திற்கு விமானம் வந்தடைந்ததது.


    • ஏர் இந்தியா விமானம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து சேர 14 மணி நேரம் ஆகும்.
    • ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

    நியூயார்க்கில் இருந்து டெல்லி நோக்கி இன்று ஏர் இந்தியா பயணிகள் விமானம்  புறப்பட்டு வந்துகொண்டிருந்தது. சுமார் 350 பேர் இதில் பயணம் செய்தனர். விமானம் நார்வே வான்பகுதியில் பறந்தபோது, மருத்துவ அவசர நிலை காரணமாக லண்டனுக்கு திருப்பி விடப்பட்டது. லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    விமானத்தில் பயணித்த ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விமானம் லண்டனில் தரையிறக்கப்படுகிறது. அந்த நபருக்கு சிகிச்சை அளிக்க ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.

    ஏர் இந்தியாவின் இந்த இடைநில்லா விமானம் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு வந்து சேர 14 மணி நேரம் ஆகும். இன்று இரவு 11.25 மணிக்கு டெல்லி வந்து சேர வேண்டிய நிலையில் லண்டனுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் தாமதமாக வந்து சேரும் என தெரிகிறது.

    அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால், மும்பை விமான நிலையத்தில் முழு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. #AirIndia #MumbaiIndia
    மும்பை:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து இன்று மாலை மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. இரவு 8.15 மணிக்கு விமானம் தரையிறங்க முயன்ற போது, பிரேக் பகுதியில் உள்ள ஹைட்ராலிக் இயங்கவில்லை. இதனால், விமான நிலையத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது.

    தீயணைப்பு, மருத்துவம் உள்ளிட்ட குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. 15 நிமிடங்களுக்கு பின்னர் விமானம் பத்திரமாக தரையிறங்கியதை அடுத்து, விமான நிலையம் இயல்பு நிலைக்கு திரும்பியது. 
    ×