ஏர் இந்தியா விமானம் திருச்சியில் அவசரமாக தரையிறக்கம்

விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முயன்றுள்ளார்.
ஏர் இந்தியா விமானம் திருச்சியில் அவசரமாக தரையிறக்கம்
Published on

திருவனந்தபுரத்தில் இருந்து ஏர் இந்தியா IX 934 விமானம் ஒன்று பெங்களூரு புறப்பட்டது. நடுவானில் பறந்த போது திடீரென காற்றழுத்த குறைபாடு ஏற்பட்டுள்து. இதன் காரணமாக விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முயன்றுள்ளார். விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து உடனடியாக விமானத்தை திருச்சியில் தரையிறக்கினார்.

விமானம் உடனடியாகவும், பாதுகாப்பாகவும் தரையிறக்கப்பட்டதை அடுத்து விமானத்தில் இருந்த 167 பயணிகளும் உயிர் தப்பினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com