இந்தியாவில் கடந்த 3 நாட்களில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்... அச்சத்தில் பயணிகள்

டெல்லியில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.இந்த விமானத்தில் 200 பயணிகள் பயணித்தனர்.
Akasa Air flight
Published on

இந்தியாவில் ஏர் ஆகாசா மற்றும் இண்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் வெடிகுண்டு மிரட்டல்கள் புரளி என்று தெரியவந்தது.

நேற்றிரவு டெல்லியில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் விமானம் அவசரமாக அகமதாபாத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் 200 பயணிகள் பயணித்தனர்.

இன்று டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்ட ஏர் ஆகாசா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மீண்டும் விமானம் டெல்லிக்கே திருப்பி விடப்பட்டது. இந்த விமானத்தில் 184 பேர் பயணித்துள்ளனர்.

கடந்த 3 நாட்களில் இந்தியாவில் 12 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான போக்குவரத்து அமைச்சகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com