செய்திகள்

கத்தார், குவைத் நாடுகளில் 4 நாள் சுற்றுப்பயணம் - சுஷ்மா சுவராஜ் புறப்பட்டு சென்றார்

Published On 2018-10-28 15:22 GMT   |   Update On 2018-10-28 15:22 GMT
கத்தார், குவைத் ஆகிய நாடுகளில் 4 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்றிரவு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார். #SushmaSwarajdeparts #SushmaSwarajKuwaitvisit
புதுடெல்லி:

இந்தியாவின் இயற்கை எரிவாயு தேவையில் 50 சதவீதம் அளவுக்கு கத்தார் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. கத்தாரில் வாழும் மக்கள்தொகையில் 27 சதவீதம் அளவுக்கு இங்கு சுமார் 7 லட்சம் இந்தியர்கள் பணியாற்றி, வசித்து வருகின்றனர்.

இதேபோல், இந்தியாவுக்கு பெட்ரோலிய கச்சா எண்ணைய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான குவைத்தில் சுமார் 10 லட்சம் வாழ்கின்றனர்.

இந்நிலையில், வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் நட்புறவுகளை பலப்படுத்தும் விதமாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கத்தார், குவைத் நாடுகளில் 4 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கத்தார் மற்றும் குவைத் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரிகளின் அழைப்பை ஏற்று சுஷ்மா சுவராஜ் இன்றிரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றார்.

இந்த பயணத்தின் முதல்கட்டமாக இன்றும் நாளையும் கத்தாரில் தங்கியிருக்கும் சுஷ்மா, 30,31 ஆகிய தேதிகளில் குவைத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கத்தார், குவைத் நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மற்றும் இரு நாடுகளின் அமிர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தும் அவர், அங்கு வாழும் இந்தியர்கள் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். #SushmaSwarajdeparts #SushmaSwarajKuwaitvisit #SushmaSwarajQatarvisit
Tags:    

Similar News