செய்திகள்

ராகுல் காந்தி முன்னிலையில் தாரிக் அன்வர் காங்கிரசில் இணைந்தார்

Published On 2018-10-27 09:36 GMT   |   Update On 2018-10-27 09:36 GMT
ரபேல் ஊழல் விவகாரத்தில் மோடியை சரத் பவார் ஆதரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரசில் இருந்து விலகிய தாரிக் அன்வர் ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரசில் இணைந்தார். #TariqAnwar #TariqAnwarjoinsCongress
புதுடெல்லி:

இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியா காந்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1999-ம் ஆண்டு சரத் பவார், பி.ஏ. சங்மா மற்றும் தாரிக் அன்வர் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினர். சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் என்னும் புதிய கட்சியை தொடங்கினர்.



சமீபத்தில் ரபேல் போர் விமான ஊழல் தொடர்பாக பிரதமர் மோடியை ஆதரிக்கும் வகையில் சரத் பவார் கருத்து தெரிவித்ததால் தேசியவாத காங்கிரசில் இருந்து விலகிய தாரிக் அன்வர், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த தாரிக் அன்வர் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக்கொண்டார். #TariqAnwar #TariqAnwarjoinsCongress
Tags:    

Similar News