செய்திகள்

சந்திரகாசி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு ரெயில்வே மந்திரி இரங்கல்

Published On 2018-10-23 20:01 GMT   |   Update On 2018-10-23 20:01 GMT
மேற்கு வங்காளத்தின் சந்திரகாசி ரெயில் நிலைய நடைமேடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இரங்கல் தெரிவித்துள்ளார். #Santragachhi #Stampede #PiyushGoyal
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மாநிலம் ஹவுராவில் சந்திரகாசி ரெயில் நிலையம் அமைந்துள்ளது. நேற்று இரவு இந்த ரெயில் நிலையத்தில் இரண்டு ரெயில்கள் ஒரே சமயத்தில் வந்துள்ளன.

ரெயில்களில் இருந்து இறங்கிய பயணிகள் நடைமேம்பாலத்தில் திபுதிபுவென ஏறினர். அப்போது திடீரென அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்த மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, சந்திரகாசி ரெயில் நிலைய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.



இந்நிலையில், சந்திரகாசி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் ஆழந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், சந்திரகாசி ரெயில் நிலைய நடைமேடை கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இதில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என  பதிவிட்டுள்ளார். #Santragachhi #Stampede #PiyushGoyal
Tags:    

Similar News