செய்திகள்

டெல்லி பறந்த கோவா மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பாஜக-வில் இணைகிறார்கள்?

Published On 2018-10-16 03:48 GMT   |   Update On 2018-10-16 03:48 GMT
கோவா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அவசரமாக நேற்று டெல்லி சென்றுள்ளனர். அவர்கள் பாஜக-வில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. #BJP #Congress
பனாஜி:

கோவா மாநிலத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றாலும், ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடத்தில் வெற்றி பெறவில்லை.

அதேவேளையில் 2-வது இடம்பிடித்து பாஜக சுயேட்சை உள்பட சில எம்எல்ஏ-க்களுடன் ஆட்சியமைத்தது. தற்போது மனோகர் பாரிக்கர் முதலமைச்சராக இருந்து வருகிறார்.

விரைவில் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக பாஜக கட்சி முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. அதேவேளையில் ஆட்சி செய்யும் மாநிலத்தில் எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை இழுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் கோவா மாநிலத்தைச் சேர்ந்த தயானந்த் சோப்தே, சுபாஷ் ஷிரோத்கர் ஆகிய இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் நேற்றிரவு அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.



அவர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக-வில் இணைவார்கள். இதற்காக அமித் ஷாவை சந்திக்க வாய்ப்புள்ளது என்ற மூத்த பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. இதில் தயானந்த் மந்த்ரேம் தொகுதியில் முன்னாள் பாஜக முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகரை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. #BJP #Congress
Tags:    

Similar News