செய்திகள்

ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் - யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

Published On 2018-10-10 04:56 GMT   |   Update On 2018-10-10 04:56 GMT
உத்தர பிரதேச மாநிலத்தில் ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #UPTrainDerailed #YogiAdityanath #TrainAccident
ரேபரேலி:

உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் ரெயில் நிலையம் அருகே நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 21 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்படி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு, சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலைத் தெரிவித்த அவர், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி டிஜிபிக்கு உத்தரவிட்டார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். #UPTrainDerailed #YogiAdityanath #TrainAccident

Tags:    

Similar News