செய்திகள்

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கறிஞராக பணியாற்ற தடை கோரிய வழக்கு - தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

Published On 2018-09-25 05:48 GMT   |   Update On 2018-09-25 05:48 GMT
உச்சநீதிமன்றத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கறிஞர்களாக பணியாற்ற தடைகோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. #SupremeCourt
புதுடெல்லி:

சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிட்டத்தட்ட அரசு ஊழியர்கள் என்றபட்சத்தில் அவர்கள் வழக்கறிஞராக பணியாற்றக்கூடாது என்றும், அவர்கள் பணியாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அஸ்வினி உபாத்யாயா என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அந்த மனுவில் அவர் நேரடியாகவே பாஜகவைச் சேர்ந்த பலரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தபடியே வழக்கறிஞர்களாகவும் பணியாற்றுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக எவ்வித முக்கிய காரணங்களும் நீதிமன்றம் தெரிவிக்காத நிலையில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வழக்கறிஞராக பணியாற்ற தடை ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. #SupremeCourt
Tags:    

Similar News