செய்திகள்

கடனை திருப்பிச் செலுத்தும் எனது முயற்சியை அமலாக்கத்துறை எதிர்த்தது - விஜய் மல்லையா தகவல்

Published On 2018-09-24 19:44 GMT   |   Update On 2018-09-24 19:44 GMT
கடனை திருப்பிச் செலுத்தும் எனது முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமலாக்கத்துறை எதிர்த்து வந்ததாக மும்பை கோர்ட்டில் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். #VijayMallya #ED #MumbaiCourt
மும்பை:

புதிதாக கொண்டுவரப்பட்ட ‘தலைமறைவு பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின்’ கீழ், விஜய் மல்லையாவை தலை மறைவு குற்றவாளியாக அறிவிக்கக்கோரி, மும்பை தனிக்கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. அதற்கு தனது வக்கீல் மூலமாக விஜய் மல்லையா நேற்று பதில் அளித்தார்.

அதில் அவர் கூறி இருந்ததாவது:-

கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக, கடனை திருப்பிச் செலுத்த நான் தொடர்ந்து முயன்று வருகிறேன். ஆனால், அந்த முயற்சிகளுக்கு உதவி செய்யாமல், அமலாக்கத்துறை எதிர்த்து வந்தது. பொது மற்றும் தேசநலனுக்கு எதிராக செயல்படுகிறது. லண்டன் கோர்ட்டில், என்னை இந்தியாவுக்கு நாடு கடத்தக்கோரும் வழக்கு விசாரணைக்கு நான் ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். எனவே, நான் இந்தியாவுக்கு வர மறுப்பதாக கூறுவது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அடுத்தகட்ட விசாரணையை, 28-ந் தேதிக்கு நீதிபதி எம்.எஸ்.ஆஸ்மி ஒத்தி வைத்தார். #VijayMallya #ED #MumbaiCourt 
Tags:    

Similar News