செய்திகள்

டெல்லி அரசு மருத்துவமனையில் மருந்து குறைபாடு - 2 வாரங்களில் 13 குழந்தைகள் பலி

Published On 2018-09-23 12:20 GMT   |   Update On 2018-09-23 12:20 GMT
டெல்லி அரசு மருத்துவமனையில் தொண்டை அழற்சி நோய்க்கான மருந்து பற்றாக்குறையால், கடந்த 14 நாட்களில் 13 குழந்தைகள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Delhi #MaharishiValmikiHospital
புதுடெல்லி:

டெல்லியில் இயங்கிவரும் மஹரிஷி வால்மீகி என்ற அரசு மருத்துவமனையில் தொண்டை அழற்சி நோயால் சிறுவர்கள் முதல் குழந்தைகள் வரை பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவமனையில் தொண்டை அழற்சிக்கான மருந்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும், மருந்துகளை பெற்றோரை வாங்கி தருமாறும் வற்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து குறைபாடால், கடந்த 14 நாட்களில் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த வித தகவலும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Delhi #MaharishiValmikiHospital
Tags:    

Similar News