செய்திகள்

பாஜக தலைவர்கள் யாரேனும் கற்பழிக்கப்பட்டால் ரூ.20 லட்சம் வழங்குவேன் - அரியானா ஆம் ஆத்மி தலைவர் சர்ச்சை கருத்து

Published On 2018-09-18 21:10 GMT   |   Update On 2018-09-18 21:10 GMT
பாரதிய ஜனதா தலைவர்கள் யாரேனும் 10 பேரால் கற்பழிப்புக்கு உள்ளானால் அவர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.20 லட்சம் வழங்குவேன் என அரியான ஆம் ஆத்மி தலைவர் சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார். #RewariRapeCase #AAP
சண்டிகர் :

அரியானா மாநிலத்தில் சி.பி.எஸ்.சி. தேர்வில் முதலிடம் பிடித்து சமீபத்தில் ஜனாதிபதியிடம் விருது பெற்ற 19 வயது மாணவி, கோச்சிங் கிளாஸ் சென்று விட்டு தனது கிராமத்துக்கு நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த சிலர் அவரை கடத்திச் சென்று மறைவிடத்தில் வைத்து கற்பழித்தனர்.

அதன்பின்னர், அங்குள்ள பஸ் ஸ்டாப் ஒன்றில் மாணவியை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் நாடுமுழுவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, பா.ஜ.க தலைமையிலான அரியானா அரசு பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சத்தை அவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கியது. ஆனால், எங்களுக்கு நீதி தான் முக்கியம் இழப்பீடு அல்ல என அந்த தொகையை திரும்ப அளிக்க மாணவியின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக வெறும் ரூ. 2 லட்சம் வழங்கியதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே பாரதிய ஜனதா தலைவர்கள் யாரேனும் 10 பேரால் கற்பழிப்புக்கு உள்ளானால் அவர்களுக்கு இழப்பீடாக ரூ.20 லட்சத்தை நான் வழங்குவேன் என அம்மாநில ஆம் ஆத்மி கட்சி தலைவர் நவீன் ஜெய்ஹிந்த் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பரவலாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, அவரை தொடர்பு கொண்டு பேசிய ஊடகங்களிடம் தனது கருத்தில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ நான் கூறிய கருத்தில் நான் உறுதியாக உள்ளேன், சமூகத்தில் பெண்களை அவமதிக்க கூடாது.

பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் நீதியை கேட்கிறார்கள். ஆனால், அரசு ரூ.2 லட்சத்தை அவர்களின் கைகளில் திணித்துள்ளது, அதை அவர்கள் திரும்ப அளிக்க போவதாக கூறியுள்ளனர். அரசின் செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதற்கு ஒப்பானது.

அரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இவற்றை கண்டும் காணாமல் இருப்பது போல் முதல்வர் உள்ளார். மாநில அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. இங்கு கௌரவர்களின் ஆட்சி நடைபெருவது போல் உள்ளது. முதல்வர் துரியோதனனை போன்று நடந்து கொள்கிறார் ’ என அவர் தெரிவித்தார். #RewariRapeCase #AAP
Tags:    

Similar News