செய்திகள்
திருப்பதி கோவிலில் நடிகை ரோஜா சாமி தரிசனம் செய்து விட்டு வந்த காட்சி.

திருப்பதி கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் கட்டும் வரை போராட்டம்- நடிகை ரோஜா

Published On 2018-09-01 07:57 GMT   |   Update On 2018-09-01 07:57 GMT
திருப்பதி கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் கட்டப்படும் வரையில் போராட்டம் தொடரும் என்று ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா தெரிவித்தார். #YSRCongress #Roja #Tirupati
திருமலை:

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்திற்கு பிறகு அவர் கூறியதாவது:- ஏழுமலையான் கோவிலுக்கு எதிரே இருந்த மிகவும் பழமை வாய்ந்த ஆயிரங்கால் மண்டபம் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இடிக்கப்பட்டது.

ஆயிரங்கால் மண்டபம் என்பது சாட்சாத் ஏழுமலையான் அமர்ந்து பக்தர்களுக்கு மோட்சம் அளிப்பதாக போற்றக் கூடிய இடமாக கருதி வந்ததால் அதனை இடித்து விடக்கூடாது என்று பல குருமார்களும் தலைவர்களும் எதிர்ப்பும் கண்டனம் தெரிவித்தும் ஆயிரம் கால் மண்டபம் இடிக்கப்பட்டது.


ஆனால் இன்றளவும் ஆயிரம் கால் மண்டபம் கட்டப்படவில்லை. இதற்கான எந்த நடவடிக்கையும் சந்திரபாபு நாயுடு எடுத்ததாகவும் தெரியவில்லை. மேலும் ஆயிரம் கால் மண்டபம் கட்டப்படும் வரையில் போராட்டம் தொடரும்.

அத்துடன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவிக்கு வந்த உடன் ஆயிரம் கால் மண்டபம் கட்டுவதையே முதல் பணியாக மேற்கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார். #YSRCongress #Roja #Tirupati
Tags:    

Similar News