செய்திகள்

இதற்காகவா பணமதிப்பிழப்பு நடவடிக்கை?- ப.சிதம்பரம் காட்டம்

Published On 2018-08-29 09:52 GMT   |   Update On 2018-08-29 09:52 GMT
வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிப்பதற்காகவா இந்த பணமதிப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். #PChidamabaram #Demonetisation
புதுடெல்லி:

இந்திய ரிசர்வ் வங்கி பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது. விநியோகிக்கப்பட்ட ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகளில் ரூ.15 லட்சத்து 41 கோடி ரூபாயில், ரூ.15, 310,73  கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் ரூ.10,720 கோடி பணம் வரவில்லை என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,  ‘வெறும் 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட மத்திய அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது? இந்த 13 ஆயிரம் கோடி பணமும் கூட நேபாளம், பூட்டான் போன்ற நாடுகளில் இருக்கலாம். சிறிது பணம் தொலைந்தோ, அழிக்கப்பட்டோ இருக்கலாம்.


பணமதிப்பு நீக்கத்தினால் இந்திய பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை இழந்துள்ளது. இதனால் மட்டும் ரூ.2.25 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது’ என தெரிவித்துள்ளார். #PChidamabaram #Demonetisation
Tags:    

Similar News