செய்திகள்

மேற்குவங்காளம் உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரசினரின் வெற்றி செல்லும் - சுப்ரீம் கோர்ட்

Published On 2018-08-24 13:45 GMT   |   Update On 2018-08-24 13:45 GMT
மேற்குவங்காளத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 20 ஆயிரம் இடங்களில் திரிணாமுல் காங்கிரசார் பெற்ற வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது. #WestBengal #PanchyatPoll #TrinamoolCongress
புதுடெல்லி:

மேற்கு வங்காளம் மாநிலத்தில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
 
இதையடுத்து, எதிர் வேட்பாளர் இல்லாததால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 20 ஆயிரம் பேர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இவர்களது வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். விசாரணை முடிவில் 20 ஆயிரம் பேரின் வெற்றி செல்லாது என கோர்ட் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலில் 20 ஆயிரம் இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் பெற்ற வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்ற மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று ரத்து செய்துள்ளது.

மேலும், இ-மெயில் மற்றும் வாட்ஸ் அப்பில் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. #WestBengal #PanchyatPoll #TrinamoolCongress
Tags:    

Similar News