செய்திகள்

வெள்ளத்தால் நிலைகுலைந்து தவிக்கும் கேரளாவுக்கு தாராளமாக நிதியளிக்கும் மாநில அரசுகள்

Published On 2018-08-18 11:56 GMT   |   Update On 2018-08-18 11:56 GMT
கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு உத்தரப்பிரதேச அரசு ரூ.15 கோடியும், மத்தியப்பிரதேச அரசு ரூ.10 கோடியும் நிதியுதவி அளித்துள்ளன. #KeralaRains #KeralaFloods
லக்னோ:

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது.

மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த நூறாண்டுகளில் இல்லாத மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. இன்று மட்டும் 22 பேர் பலியாகியுள்ள நிலையில் மழை பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பெரும் பேரழிவில் இருந்து கேரளாவை  மீட்டெடுக்க பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

தமிழக அரசின் சார்பில் 10 கோடி, டெல்லி அரசின் சார்பில் 10 கோடி, தெலுங்கானா அரசின் சார்பில் 25 கோடி, பீகார் அரசின் சார்பில் 10 கோடி,  அரியானா அரசின் சார்பாக 10 கோடி, மகாராஷ்டிரா சார்பில் 20 கோடி, குஜராத் சார்பில் 10 கோடி, ஜார்க்கண்ட் சார்பில் 5 கோடி ரூபாயும் என நிதியுதவி குவிந்து வருகின்றன. 

அவ்வகையில் கேரளா மாநில அரசின் துயர் துடைப்பு பணிகளுக்கு உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ரூ.15 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேபோல், மத்தியப்பிரதேசம் மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும்ம் பஞ்சாப் மாநில அரசு சார்பில் கூடுதலாக ரூ. 5 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என முதல் மந்திரி அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். #KeralaRains #KeralaFloods 
Tags:    

Similar News