செய்திகள்

கேரளாவில் நாளை முதல் ஜனாதிபதி சுற்றுப்பயணம்- சட்டமன்ற வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்பு

Published On 2018-08-04 10:36 GMT   |   Update On 2018-08-04 10:36 GMT
கேரளாவில் நாளை முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கேரள சட்டமன்ற வைரவிழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். #PresidentRamNathKovind #PresidentVisitKerala
திருவனந்தபுரம்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேரள மாநிலத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நாளை மாலை கேரளா வந்து சேரும் அவர், நாளை மறுநாள் நடைபெற உள்ள சட்டமன்ற வைர விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது வைரவிழா கொண்டாட்டங்களின் நிறைவை குறிக்கும் வகையில் ‘ஜனநாயக திருவிழா’வை தொடங்கி வைக்கிறார். 

விழாவில் மாநில ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.

அதன்பின்னர் 2 நாட்கள் நடைபெறும் தேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கிறார். ‘சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான அதிகாரங்களை பெறுவதில் உள்ள சவால்கள்’ என்ற தலைப்பில் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 7-ம் தேதி திரிச்சூரில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவை ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார். குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #PresidentRamNathKovind #PresidentVisitKerala
Tags:    

Similar News