செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு தனித்து 150 இடங்கள் கிடைக்கும் - ப.சிதம்பரம் கணிப்பு

Published On 2018-07-23 07:03 GMT   |   Update On 2018-07-23 07:03 GMT
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் தனித்து 150 இடங்களை பெற முடியும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். #PChidambaram #Congress
புதுடெல்லி:

டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்து கொண்டு தனது கருத்தை வெளியிட்டார். அவர் பேசும் போது கூறியதாவது:-

தற்போது காங்கிரஸ் 12 மாநிலங்களில் வலுவாக உள்ளது. இப்போது காங்கிரசுக்கு உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையை விட வரும் தேர்தலில் 3 மடங்கு எண்ணிக்கை உயருவதற்கு வாய்ப்பு உள்ளது.

அதாவது காங்கிரஸ் தனித்து 150 இடங்களை பெற முடியும். மற்ற மாநிலங்களில் நாம் பிராந்திய கட்சிகளுடன் வலுவான கூட்டணி அமைப்பது முக்கியமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுக்க எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக ஏற்கனவே ராகுல்காந்தி கூறி இருந்தார். அந்த கருத்தை முன்வைத்து பலரும் இந்த கூட்டத்தில் பேசினார்கள்.

சில தலைவர்கள் பேசும் போது, எதிர்க்கட்சிகள் பலவற்றையும் சேர்த்து வலுவான கூட்டணி அமைப்பதற்கு நமது கட்சி எந்த தயக்கமும் காட்ட கூடாது.

நமது வியூகம் சரியான நிலையில் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ராகுல்காந்தியை முன்னிலைப்படுத்திதான் இந்த கூட்டணி அமைய வேண்டும் என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். #PChidambaram #Congress #ParliamentElection2019
Tags:    

Similar News