செய்திகள்

சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக இளைஞரணி கொலைவெறி தாக்குதல்

Published On 2018-07-17 13:52 GMT   |   Update On 2018-07-17 13:52 GMT
ஜார்கண்ட் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது பாஜக, வி.எச்.பி இளைஞரணியினர் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். #SwamiAgnivesh
ராஞ்சி:

ஜார்க்கண்ட் மாநிலம் லதிபாராவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்வதற்காக சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் சென்று இருந்தார். இன்று காலை தங்கியிருந்த ஓட்டலில் இருந்து அவர் வெளியே வந்த போது அங்கு கூடியிருந்த, பா.ஜ.க இளைஞர் அணியினர், ஆர்.எஸ்.எஸ். விஷவ இந்து பரிஷத் அமைப்பினர் அவரை தாக்கினர்

சுவாமி அக்னிவேஷ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க தொண்டர்கள் தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் பழங்குடி மக்களை தூண்டிவிடும் கிறிஸ்தவ மிஷனரிகளுடன் சுவாமி அக்னிவேசுக்கு தொடர்புள்ளது என பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

மாட்டிறைச்சி பற்றி கருத்து தெரிவிக்கும் அவர் சனாதன் தர்மத்துக்கு எதிராக செயல்படுவதாகவும் வலதுசாரி ஆர்வலர்கள்  குற்றம் சாட்டுகிறார்கள். அக்னிவேஷ் அரியானா மாநிலத்தின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார். அவர் அரசியலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னதாக அமைச்சரவையிலும் இடம் பெற்று இருந்தார். 

மேலும், அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு குழுவிலும் இடம் பெற்று இருந்தார். இப்போது அவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News